/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 10 லட்சம் சதுர அடியில் மால் பெருங்குடியில் கட்டுகிறது 'போரம்' 10 லட்சம் சதுர அடியில் மால் பெருங்குடியில் கட்டுகிறது 'போரம்'
10 லட்சம் சதுர அடியில் மால் பெருங்குடியில் கட்டுகிறது 'போரம்'
10 லட்சம் சதுர அடியில் மால் பெருங்குடியில் கட்டுகிறது 'போரம்'
10 லட்சம் சதுர அடியில் மால் பெருங்குடியில் கட்டுகிறது 'போரம்'
ADDED : ஜூன் 12, 2024 12:27 AM

சென்னை சென்னையில் மக்களின் பொழுதுபோக்கு இடமாக மால்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் அண்ணா சாலை, ராயப்பேட்டை, அரும்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, பழைய மாமல்லபுரம் சாலை என பல்வேறு இடங்களில் மால்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கடைகள் மற்றும் தியேட்டர்கள் நடத்த கடும் போட்டி நிலவுகிறது. இதனால், புதிதாக பல்வேறு இடங்களில் மால்கள் கட்டுவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த வகையில் பழைய மாமல்லபுரம் சாலையில், பெருங்குடி சந்திப்பு அருகில், புதிய மால் கட்டுவதற்காக 'போரம்' நிறுவனம் நிலம் வாங்கியுள்ளது.
இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:
இந்நிறுவனம் வடபழனியில் 'விஜயா மால்' கட்டியது. இந்த மால் தற்போது 'நெக்சஸ்' நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.
இதையடுத்து, போரம் நிறுவனம் பழைய மாமல்லபுரம் சாலையில் புதிய பிரமாண்ட மால் கட்டும் திட்டத்தை உருவாக்கியது. 2022ல் இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை இந்நிறுவனம் துவக்கியது.
இதன் அடிப்படையில். பெருங்குடியில், 19 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு புதிய கட்டுமான திட்டத்தை செயல்படுத்த போரம் நிறுவனம் முடிவு செய்தது.இதில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவு மாலுக்கானதாகவும், பிற பகுதிகள், வணிக, அலுவலக வளாகங்கள், நட்சத்திர ஹோட்டல் பயன்பாட்டிற்காகவும் ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது.
சென்னையிலேயே மிக பெரிய மால் என்ற பெயர் பெறும் வகையில் இந்த மால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.