/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மும்பை போலீஸ் என மிரட்டி மோசடி ஏர்போர்ட்டில் பெண் சுற்றிவளைப்பு மும்பை போலீஸ் என மிரட்டி மோசடி ஏர்போர்ட்டில் பெண் சுற்றிவளைப்பு
மும்பை போலீஸ் என மிரட்டி மோசடி ஏர்போர்ட்டில் பெண் சுற்றிவளைப்பு
மும்பை போலீஸ் என மிரட்டி மோசடி ஏர்போர்ட்டில் பெண் சுற்றிவளைப்பு
மும்பை போலீஸ் என மிரட்டி மோசடி ஏர்போர்ட்டில் பெண் சுற்றிவளைப்பு
ADDED : ஜூன் 20, 2024 12:39 AM

வடபழனி, வடபழனி, வி.பி.கோவில் தெரு, குமரன் காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 52; பிரபல நாளிதழ் மேலாளர். சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை 'மும்பை போலீஸ்' எனக் அறிமுகப்படுத்தி உள்ளார்.
மேலும், 'மும்பையில் இருந்து கூரியர் வாயிலாக, தைவான் நாட்டிற்கு போதைப்பொருள் அடங்கிய 'பார்சல்' ஸ்ரீராம் பெயரில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதனால், 'மும்பை போலீசார் எந்த நேரமும் உங்களை கைது செய்யலாம்' என்றும் மிரட்டியுள்ளார். பயந்துபோன ஸ்ரீராம், மர்ம நபர் கூறிய வீடியோ அழைப்பில் பேசியபோது, 'ஜாமின் பெற பணம் செலுத்த வேண்டும்' என கூறியுள்ளார். அதன்படி, அவர் கூறிய வங்கி கணக்கிற்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் ஸ்ரீராம் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட, தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்தார். தி.நகர் போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு, வடபழனி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில், வேப்பேரியைச் சேர்ந்த பிரவின்குமார், 33, என்பவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது வேப்பேரி, ஏழுகிணறு, விழுப்புரம் காவல் நிலையங்களில் 'சைபர் கிரைம்' குற்ற வழக்குகள் உள்ளன. முக்கிய குற்றவாளி புரசைவாக்கம், கொசப்பேட்டை, தேவராஜ் தெருவைச் சேர்ந்த சாலமோன் டேனியல் மனைவி நந்தினி, 32, என்பது தெரிந்தது.
இவர் மலேஷியாவில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, நந்தினி தேடப்படும் குற்றவாளி என, போலீசார் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கினர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை மலேஷியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நந்தினியை, விமான நிலைய அதிகாரிகள் பிடித்து, வடபழனி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து, நந்தினி வேறு யாரிடம் எல்லாம் இதேபோன்று பணத்தை சுருட்டி உள்ளார் என, விசாரிக்கின்றனர்.