/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'ஸ்லீப்பர்' கட்டையால் சாக்கடை அடைப்பு 'ஸ்லீப்பர்' கட்டையால் சாக்கடை அடைப்பு
'ஸ்லீப்பர்' கட்டையால் சாக்கடை அடைப்பு
'ஸ்லீப்பர்' கட்டையால் சாக்கடை அடைப்பு
'ஸ்லீப்பர்' கட்டையால் சாக்கடை அடைப்பு
ADDED : ஜூன் 07, 2024 12:29 AM

ஆவடி,ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் பட்டாபிராம், வள்ளலார் நகர், ஏழாவது தெரு உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ரயில்வே பணிக்காக இங்குள்ள சாலையோரத்தில், 50க்கும் மேற்பட்ட சிமென்ட் 'ஸ்லீப்பர்' கட்டைகள் வைக்கப்பட்டன.
சாக்கடை அருகே வைக்கப்பட்டுள்ள இந்த ஸ்லீப்பர் கட்டையால், அப்பகுதியில் செடி, கொடிகள் முளைத்து, புதர் போல் காட்சி அளிக்கிறது.
மழைக்காலத்தில் சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியின்றி, அருகில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது.
பட்டாபிராம் ரயில் நிலையத்தில், நிரந்தர நிலைய அலுவலர் இல்லாததால், யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம், சாக்கடை அடைப்பிற்கு காரணமாக உள்ள ஸ்லீப்பர் கட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.