ADDED : ஜூன் 01, 2024 12:28 AM
சென்னை, சென்னையில் இன்றும், நாளையும், எப்.எம்.எஸ்.சி.ஐ., இந்திய தேசிய ஸ்பிரின்ட் சாம்பியன்ஷிப் எனும் பைக் ரேஸ் போட்டிகள் நடக்க உள்ளன.
சென்னை சர்வதேச சர்க்யூட்டில் இன்றும், நாளையும், எப்.எம்.எஸ்.சி.ஐ., இந்திய தேசிய ஸ்பிரின்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.
ஆறு சுற்றுகளுடன் நடக்கும் இதில், பல்வேறு புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 12 பிரிவுகளில், 75க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளின் அடுத்தடுத்த சுற்றுகள் பெங்களூரு, சண்டிகர், குவஹாத்தி, கோவா ஆகிய நகரங்களில் நடக்கும். இதன் இறுதிப் போட்டிகள், டிச., 15, 16ம் தேதிகளில், புனேவில் நடக்க உள்ளன. போட்டிகள், mylaps.com எனும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.