ADDED : ஜூன் 10, 2024 01:56 AM
சென்னை:இஸ்கான் சார்பில், 'ஆன்-லைன்' வாயிலாக, 18 நாட்கள் இலவசமாக பகவத் கீதை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. விருப்பமுடையோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அகில உலக பக்தி இயக்கம் எனப்படும் 'இஸ்கான்' சார்பில், பகவத் கீதை வகுப்புகள், 18 நாட்கள் 18 பிரிவுகளாக தமிழில் நடத்தப்பட உள்ளன.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை நடத்தப்படுகிறது. 'ஆன்-லைன்' வாயிலாக நடத்தப்படும் இந்த வகுப்புகள், வரும் 16ம் தேதி துவங்க உள்ளது.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், https://chat.whatsapp.com/J3r0xm5eeEO6RkVcgunoSD என்ற இணையதள முகவரியிலும், 73585 11132 என்ற 'வாட்ஸாப்' எண்ணிலும் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்யலாம் என, இஸ்கான் அறிவித்துள்ளது.