/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டுனர்களிடம் மோசடி வங்கி ஊழியர் சிக்கினார் ஓட்டுனர்களிடம் மோசடி வங்கி ஊழியர் சிக்கினார்
ஓட்டுனர்களிடம் மோசடி வங்கி ஊழியர் சிக்கினார்
ஓட்டுனர்களிடம் மோசடி வங்கி ஊழியர் சிக்கினார்
ஓட்டுனர்களிடம் மோசடி வங்கி ஊழியர் சிக்கினார்
ADDED : ஜூன் 09, 2024 01:22 AM

சென்னை:திருத்தணி, சுப்ரமணி நகரைச் சேர்ந்தவர் ரியாஸ், 23. இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு முதல், 'ரேபிடோ, ஊபர், ஓலா, நம்ம யாத்ரி ரைடு புக்கிங்' உள்ளிட்ட கால் டாக்சிகளை 'புக்' செய்து பயணித்து வந்துள்ளார். பின் பணம் செலுத்துவதற்கு மொபைல் போன் 'ஆப்' பயன்படுத்தி, செலுத்தியதுபோல் காண்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார், மேலும், பணம் வராதது குறித்து வாகன ஓட்டுனர்கள் கேட்டால், அவர்களை மிரட்டியும் வந்துள்ளார்.
இதுகுறித்து, 'நம்ம யாத்ரி ரைடு புக்கிங்' செயலியின் அதிகாரி சதீஷ் அளித்த புகாரின்படி, ரியாஸை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வகையில், கடைகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.