/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கெட்டுப்போன பிரியாணி ஹோட்டலில் அடிதடி கெட்டுப்போன பிரியாணி ஹோட்டலில் அடிதடி
கெட்டுப்போன பிரியாணி ஹோட்டலில் அடிதடி
கெட்டுப்போன பிரியாணி ஹோட்டலில் அடிதடி
கெட்டுப்போன பிரியாணி ஹோட்டலில் அடிதடி
ADDED : ஜூன் 13, 2024 12:12 AM
புளியந்தோப்பு, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 29. இவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், பீச் ஸ்டேஷன் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.
இவர், நேற்று முன்தினம், ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 12 பேருடன், புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலையில், 'ஆல்பா' பிரியாணி கடையில் சாப்பிட சென்றார்.
அவர்கள் சாப்பிட்ட பிரியாணியில் இருந்த மாட்டிறைச்சி கெட்டுப்போயிருந்தது. இது குறித்து கடை நிர்வாகியிடம் கூறினார். அதை முகர்ந்து பார்த்த நிர்வாகி, பிரியாணி கெட்டுப்போனதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களிடம் பிரியாணிக்கு வாங்கிய பணத்தை, திரும்ப கொடுக்க முயன்றுள்ளார்.
ஆனால், பிரேம்குமார், பிரியாணி மற்றும் கடையை போட்டோ, வீடியோ எடுத்து, அந்த பகுதிக்கான உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் செய்தார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலானது.
பிரேம்குமாருடன் வந்த ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்த தீபன், 28, விஜய், 30, ஜான்சன், 27, சூரஜ், 29, ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து விசாரித்த புளியந்தோப்பு போலீசார், பிரியாணி கடை ஊழியர்களான அதே பகுதியை சேர்ந்த ரபீக் செரீப், 23, மொய்னுதீன், 30, பாபு பாஷா, 31, படாளத்தைச் சேர்ந்த பரத், 27, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.