/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ: மூவர் 'சீரியஸ்' பஸ் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ: மூவர் 'சீரியஸ்'
பஸ் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ: மூவர் 'சீரியஸ்'
பஸ் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ: மூவர் 'சீரியஸ்'
பஸ் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ: மூவர் 'சீரியஸ்'
ADDED : ஜூன் 20, 2024 12:50 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து, நேற்று இரவு, பயணியரை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
வேலப்பன்சாவடி மேம்பாலம் கீழே பஸ் திரும்பியபோது, குமணன் சாவடியிலிருந்து வேகமாக வந்த ஆட்டோ, எதிர்பாராமல் பஸ் மீது மோதி கவிழ்ந்தது.
அப்பளம் போல் ஆட்டோ நொறுங்கியது. ஆட்டோவில் இருந்து துாக்கி வீசப்பட்ட மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆட்டோ ஓட்டுனர், உடன் இருந்தோர் மது போதையில் இருந்ததாக, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.