/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மகன் பாலியல் புகாரில் சிக்கியதாக பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி மகன் பாலியல் புகாரில் சிக்கியதாக பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி
மகன் பாலியல் புகாரில் சிக்கியதாக பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி
மகன் பாலியல் புகாரில் சிக்கியதாக பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி
மகன் பாலியல் புகாரில் சிக்கியதாக பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி
ADDED : ஜூன் 07, 2024 12:28 AM
அம்பத்துார், சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த பெண் ஒருவரின், 'வாட்ஸாப்' எண்ணில், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் அழைத்துள்ளார்.
அப்போது, இப்பெண்ணின் மகன் உள்ளிட்ட நால்வர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை பெண்ணின் மகன் ஆபாச படமெடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கிலிருந்து மகனை விடுவிக்க, 45,000 ரூபாய், 'ஜி-பே' வாயிலாக அனுப்ப வேண்டுமென மிரட்டியுள்ளார்.
அப்பெண் தன் மகனிடம் பேச வேண்டுமென கூறிய போது, அவனை கைது செய்வது போன்ற போட்டோவை அனுப்பி, உடனே பணம் அனுப்புமாறு கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த அப்பெண், கல்லுாரி படிப்பை முடித்து வெளியூரில் பயிற்சிபெறும் தன் மகன் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொண்டு, தன்னிடம் பணம் இல்லை என மறுத்துள்ளார். உடனே அந்த நபர், இணைப்பை துண்டித்துள்ளார்.
இதுகுறித்து அப்பெண் தன் மகனிடம் கூற, அவர் தன் நண்பர்கள் வாயிலாக அம்பத்துார், கொரட்டூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த இரு எஸ்.ஐ.,க்களிடம் புகார் கொடுக்கலாமா என ஆலோசித்துள்ளார்.
ஆனால் அவர்கள், இதுபோன்று நிறைய மிரட்டல் வருவதாகவும், மீண்டும் வந்தால் புகார் அளிக்கும்படியும் கூறியுள்ளனர்.
இதுபோன்ற மிரட்டல்கள் அம்பத்துார், கொரட்டூர் சுற்றுவட்டாரங்களில் பெண்கள், முதியோர் உட்பட பலருக்கும் வருவதால், மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இணையவழி தொடர்பான பொதுமக்களின் புகார் மீது, போலீசார் அலட்சியம் காட்டுவதால், அம்பத்துாரில் மிரட்டல்கள் தொடர்கின்றன.