/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பலகட்ட போராட்டங்களுக்கு பின் எர்ணாவூர் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு பலகட்ட போராட்டங்களுக்கு பின் எர்ணாவூர் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு
பலகட்ட போராட்டங்களுக்கு பின் எர்ணாவூர் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு
பலகட்ட போராட்டங்களுக்கு பின் எர்ணாவூர் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு
பலகட்ட போராட்டங்களுக்கு பின் எர்ணாவூர் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு
ADDED : ஜூலை 20, 2024 01:32 AM

எண்ணுார்:எர்ணாவூர் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக, நெய்தல் நகர் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய, ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு, எர்ணாவூர் சுற்றுவட்டார பகுதிகளில், 50,000த்துக்கும் மேற்கண்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள தெருக்களில், குழாய் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த குடிநீர் மணலி - எம்.எப்.எல்., குடிநீரேற்று நிலையத்தில் இருந்து, பல கி.மீ., துாரம் குழாய் வழியாக பயணித்து வர வேண்டியுள்ளது.
அத்துடன், ஆங்காங்கே உடைப்பு மற்றும் அழுத்தம் குறைவு காரணமாக தண்ணீர் மங்கலாகி, உயரமான பகுதிகளுக்கு வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இது குறித்து, பொதுமக்கள் அவ்வப்போது போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதுமட்டுமின்றி, பலமுறை மண்டல குழு கூட்டத்திலும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதன் விளைவாக எர்ணாவூருக்கு, அருகேயே உள்ள நெய்தல் நகர் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நெய்தல் நகர், பாரத் நகர் சந்திப்பு, ரயில்வே தண்டவாளம், பாலாஜி நகர், எர்ணாவூர் மேம்பாலம் சுரங்கப்பாதை வழியாக, குழாய்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இப்பணிகள் முடிந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் பட்சத்தில், எர்ணாவூர் மக்களின் குடிநீர் பிரச்னை முற்றிலுமாக தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.