Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

பரந்துார் வரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

ADDED : ஜூலை 27, 2024 12:34 AM


Google News
சென்னை, சென்னை பூந்தமல்லி முதல் பரந்துார் வரை மெட்ரோ வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், 1.74 கோடி ரூபாய்க்கு கையெழுத்தானது.

இந்த வழித்தடம் தோராயமாக, 43.63 கி.மீ., நீளத்திற்கு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் 19 உயர்மட்ட மெட்ரோ நிலையங்கள் அமையும். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைய உள்ள புதிய விமான நிலையம், திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையில் அமைய உள்ள பேருந்து நிலையம் மற்றும் இவ்வழித்தடத்தில் எதிர்கால வளர்ச்சி போன்றவற்றை கருத்தில் வைத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கான ஒப்பந்தம், 1.74 கோடி ரூபாயில், 'ஆர்வீ அசோஷியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் அண்டு கன்சல்டன்ட்ஸ்' நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர் சித்திக் முன்னிலையில் கையெழுத்தானது.

திட்ட அறிக்கை தயார் செய்ய, மண் ஆய்வு மற்றும் நிலப்பரப்பு ஆய்வுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளையிட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. இப்பணி நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்கு பிறகு, மொத்த நிலையங்கள் எண்ணிக்கை, நிலத்தேவை குறித்த விபரங்கள் இறுதி செய்யப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us