/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கிரீம்ஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை கிரீம்ஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கிரீம்ஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கிரீம்ஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கிரீம்ஸ் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ADDED : ஜூலை 21, 2024 01:41 AM

ஆயிரம் விளக்கு:தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் சாலை மற்றும் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுவதாக, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பட்டியல் தயாரித்து, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். நேற்று முன்தினம், 113வது வார்டு மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள சாலை, நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சியினர் அகற்றினர்.
இரண்டாவது நாளாக நேற்று, 111வது வார்டு ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை, நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கடைகள், தனியார் நிறுவனங்களின் 16 விளம்பர பலகைகள், ஏராளமான தள்ளுவண்டி கடைகளை அகற்றினர்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக நிறுத்திய வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.
மேலும் நடைபாதை கூரை, நான்கு கடைகள் முன் அமைக்கப்பட்ட 'ராம்ப்' எனும் சாய்வுதளம் ஆகியவற்றை ஜே.சி.பி., இயந்திரத்தால் இடித்து அகற்றினர்.
அண்ணா சாலையில் இருந்து பாந்தியன் சாலை சந்திப்பு வரையிலான 700 மீட்டர் கிரீம்ஸ் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
கடைகாரர்களால் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க 20க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.