/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு
வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு
வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு
வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 19, 2024 12:10 AM
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில் மீனாட்சி அம்மன், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
ஆடி மாதத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடத்தப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை மாலையில் சாயரக்ஷை பூஜை முடிந்ததும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும்.
அதைத் தொடர்ந்து சொற்பொழிவு, பஜன், கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அந்த வகையில், ஆடி முதல் வெள்ளியான இன்று காலை, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மஞ்சக்காப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.
மாலை, அம்மனுக்கு புடவை சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு மஞ்சக்காப்பு பிரசாதம் வழங்கப்படும். மாலை 5:30 முதல் 6:30 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணமும், 6:30 மணிக்கு மேல் சொற்பொழிவு மற்றும் கச்சேரியும் நடக்கிறது.