/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'புல்லட்' மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி 'புல்லட்' மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி
'புல்லட்' மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி
'புல்லட்' மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி
'புல்லட்' மீது லாரி மோதி வாலிபர் தலை நசுங்கி பலி
ADDED : மார் 13, 2025 11:35 PM
கிளாம்பாக்கம்,கிளாம்பாக்கம் அடுத்த ஊரப்பாக்கம், குமரன் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன், 38; தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடித்த லோகநாதன், தன் 'புல்லட்' இருசக்கர வாகனத்தில், தலைக்கவசம் அணியாமல் வீடு திரும்பினார்.
அப்போது, இரவு 10:15 மணியளவில், வண்டலுார் மேம்பாலத்தில் பயணித்த போது, பின்னால் வந்த சரக்கு லாரி இவர் புல்லட்டில் மோதியது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த லோகநாதன் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதால், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநரான ஜெகன்ராஜ் என்பவரை கைது செய்தனர்.