ADDED : ஜூலை 24, 2024 12:39 AM
தாம்பரம், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கற்பக கண்ணன், 23. செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், 'கேட்டரிங்' படித்துக்கொண்டு, அது சம்பந்தமான பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.
நேற்று முன்தினம், நண்பர் விவேக் என்பவருடன், 'பைக்'கில் பகுதிநேர கேட்டரிங் வேலைக்காக சென்னைக்கு சென்றார். பணி முடிந்து நேற்று அதிகாலை, செங்கல்பட்டு நோக்கி திரும்பினர்.
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் மேம்பாலம் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக, சாலையோர தடுப்பில் மோதி, இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதில், கற்பக கண்ணனுக்கு தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விவேக் பலத்த காயமடைந்தார். தகவலின்படி, போலீசார் விரைந்து, கற்பக கண்ணனின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.