Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாகனம் பறிமுதல் செய்ய சென்ற தனியார் ஊழியருக்கு அடி, உதை

வாகனம் பறிமுதல் செய்ய சென்ற தனியார் ஊழியருக்கு அடி, உதை

வாகனம் பறிமுதல் செய்ய சென்ற தனியார் ஊழியருக்கு அடி, உதை

வாகனம் பறிமுதல் செய்ய சென்ற தனியார் ஊழியருக்கு அடி, உதை

ADDED : ஜூன் 09, 2024 01:17 AM


Google News
கொடுங்கையூர்:அயனாவரம், பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பு, 27. இவர், 'சோழமண்டலம் பைனான்ஸ்' நிறுவனத்தில், அண்ணா சாலை பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.

கே.டி.கே.டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் யோகேஸ்வரன் என்பவர், ஐந்து ஈச்சர் வாகனங்களை இந்த பைனான்சில் வாங்கி உள்ளார். கடந்த மூன்று மாதங்களாக தவணை தொகை கட்டவில்லை. இதையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்ய பைனான்ஸ் நிறுவனத்தினர் அறிவுறுத்தினர். இதையடுத்து, அன்பு, அலுவலக பணியாளர்களான ஹரிபிரசாத், விஜயகாந்த் ஆகியோருடன், கொடுங்கையூர், காமராஜர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈச்சர் வாகனத்தை பறிமுதல் செய்ய நேற்று சென்றனர்.

அப்போது, கே.டி.கே.டிரான்ஸ்போர்ட் நிறுவன பணியாளர்கள், பைனான்ஸ் நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், இரும்பு ராடு உள்ளிட்டவற்றால் தாக்கினர். இதில், தலையில் பலத்த காயமடைந்த அன்பு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us