/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு ஒருவருக்கு சாகும்வரை சிறை சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு ஒருவருக்கு சாகும்வரை சிறை
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு ஒருவருக்கு சாகும்வரை சிறை
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு ஒருவருக்கு சாகும்வரை சிறை
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு ஒருவருக்கு சாகும்வரை சிறை
ADDED : ஜூலை 10, 2024 12:19 AM
சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த 35 வயது வாலிபர், 23 வயதான தன் நண்பருடன் வீட்டின் மாடியில் படுத்து துாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
போதைக்கு அடிமையானவர்கள் எனக் கூறப்படும் இவர்கள் இருவரும், 2021ல் மாடியில் துாங்கி கொண்டிருந்தனர். அவர்களுடன் 23 வயது வாலிபரின் சகோதரரான 12 வயது சிறுவனும் படுத்திருந்தார். அப்போது, 35 வயது வாலிபர், சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து, தன் சகோதரரிடம் சிறுவன் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல், அவரும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, 35 வயதான வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், 1.25 லட்சம் ரூபாய் அபராதமும், குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவனின் சகோதரருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.