/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொது ரூ.27 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது பொது ரூ.27 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது
பொது ரூ.27 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது
பொது ரூ.27 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது
பொது ரூ.27 கோடி மோசடி வழக்கில் ஒருவர் கைது
ADDED : ஜூலை 27, 2024 12:29 AM
ஆவடி, நாகப்பட்டினம், ஆலியூர், மேளத்தெருவைச் சேர்ந்தவர் அகமது கபீர், 79. இவர், கடந்த 1996ல் சிங்கப்பூரில் வேலை செய்த போது, மலேஷியாவை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் பழக்கமானார்.
மேலும், காதர் என்பவரை கூட்டாளியாக சேர்த்து, மூவரும் பூந்தமல்லி அடுத்த திருமழிசையில், 2017ல் ஒரு நிறுவனம் துவங்கினர்.
பின், இந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், காதர் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, செல்வேந்திரன், அகமது கபீர் இருவருக்கும் செட்டில்மென்ட் தொகையை தருவதாக கூறினார்.
ஆனால், காதர் கொடுத்த 27 கோடி ரூபாயை அகமது கபீருக்கு தராமல் பாஸ்கர், தினேஷ் என்பவர்களின் உதவியுடன் செல்வேந்திரன் மோசடி செய்தார்.
இதுகுறித்து அகமது கபீர் அளித்த புகாரின்படி, போலி ஆவணம் தயாரிக்க உடந்தையாக இருந்த நாகப்பட்டினம், புலியூரைச் சேர்ந்த பாஸ்கரை, கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மேற்கு தாம்பரம், டாக்டர் காலனியைச் சேர்ந்த தினேஷ், 41, நேற்று கைது செய்யப்பட்டார். தலைமறைவான செல்வேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.