/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதையில் சாலையில் துாக்கம் கார் ஏறி துணி வியாபாரி பலி போதையில் சாலையில் துாக்கம் கார் ஏறி துணி வியாபாரி பலி
போதையில் சாலையில் துாக்கம் கார் ஏறி துணி வியாபாரி பலி
போதையில் சாலையில் துாக்கம் கார் ஏறி துணி வியாபாரி பலி
போதையில் சாலையில் துாக்கம் கார் ஏறி துணி வியாபாரி பலி
ADDED : ஜூன் 24, 2024 01:55 AM
குன்றத்துார்:அதீத போதையால் சாலையோரம் படுத்திருந்தவர் மீது கார் ஏறியதில், சம்பவ இடத்திலே அவர் பலியானார்.
மாங்காடு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் வேலு, 52; துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம், மாங்காடு ஜனனி நகரில் உள்ள 'டாஸ்மாக்' கடையில், மது அருந்தி, அதீத போதையில் சாலையோரம் படுத்து உறங்கினார்.
அப்போது, டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்த ஒருவர், தன் காரை சாலையோரம் நிறுத்தியபோது, வேலு படுத்திருப்பதை அறியாமல் அவர் மீது ஏற்றினார். இதில், பலத்த காயமடைந்த வேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.