/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு
தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு
தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு
தீப்பிடித்து எரிந்த கார் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 26, 2024 12:40 AM

ஆலந்துார், கூடுவாஞ்சேரி, காயரம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் பொன் இருளப்பன், 41. இவர், வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் தொழில் செய்து வருகிறார். நேற்று, தன் தொழிலுக்கான உபகரணங்களை சென்னையில் வாங்கி கொண்டு, கூடுவாஞ்சேரிக்கு காரில் சென்றார்.
கத்திப்பாரா மேம்பாலம் அருகே, காரில் இருந்து புகை வருவதை கண்டதும் சாலையோரமாக நிறுத்தினார். காரின் முன்பகுதியில் இருந்து தீப்பிடித்து மளமளவெனஎரிய துவங்கியது.
தகவலறிந்தும், பரங்கிமலை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை நிறுத்தி, தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர். கிண்டி தீயணைப்பு துறை வீரர்கள் வந்து, அரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், அச்சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.