/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம் சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
சிறுவன் ஓட்டிய டிராக்டர் மோதி பைக்கில் சென்றவர் படுகாயம்
ADDED : ஜூன் 12, 2024 12:24 AM
ஆவடி, ஆவடி, கோவில் பதாகை, ஈஸ்வரி அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், 58. இவர், நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஆவடி செக் போஸ்ட் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த டிராக்டர் மோதி கீழே விழுந்தார். காலில் பலத்த காயம் ஏற்பட்டு ஆவடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
புகார்படி ஆவடி கவரைப்பாளையத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுனரான 16 வயது சிறுவனிடம், ஆவடி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின், சிறுவனின் தந்தை கண்ணன் என்பவரை வரவழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.