/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலிமாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலி
மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலி
மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலி
மாடியில் இருந்து விழுந்து 15 வயது சிறுவன் பலி
ADDED : ஜூலை 31, 2024 01:04 AM
குரோம்பேட்டை, குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரோமன் குமார் என்பவரின் மகன் சிமியோன், 15. நேற்று முன்தினம் இரவு, இரண்டு தளங்கள் கொண்ட வீட்டின் இரண்டாவது மாடியில், தாயுடன் உணவு அருந்திவிட்டு, பால்கனி ஓரமாக அமர்ந்திருந்த சிமியோன், எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். முதல் தளத்தின் ஓரமாக செல்லும் உயர் மின்னழுத்த வடத்தில் சிக்கி, மின்சாரம் பாய்ந்ததில் மயக்கமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுவன் இறந்தது தெரியவந்தது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.