/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது
ADDED : ஜூலை 27, 2024 12:42 AM
சென்னை, தாம்பரம் பகுதியில், 14 வயது சிறுமியை, அவரது சொந்த அத்தை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அவரது அத்தை, பிரகாஷ், 39, தாமோதரன், 54, கவிதா, 37, கற்பகம், 61, சீனிவாசன், 39, உள்ளிட்டோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.