/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அகத்தீஸ்வரர் கோவிலில் 5,000 பெண்கள் வழிபாடு அகத்தீஸ்வரர் கோவிலில் 5,000 பெண்கள் வழிபாடு
அகத்தீஸ்வரர் கோவிலில் 5,000 பெண்கள் வழிபாடு
அகத்தீஸ்வரர் கோவிலில் 5,000 பெண்கள் வழிபாடு
அகத்தீஸ்வரர் கோவிலில் 5,000 பெண்கள் வழிபாடு
ADDED : ஜூலை 31, 2024 01:11 AM

வில்லிவாக்கம், ஆடி மாத இரண்டாவது செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு, வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வில்வலன், வாதாபி என்ற இரு அரக்கர்களை வதம் செய்த அகத்திய மாமுனிவர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில் சிவபெருமானை வழிபட்டார் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரரை, ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் விலகி, நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது.
நேற்று ஆடி இரண்டாவது வார செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு, அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்மாள் அருள்பாலித்தனர்.
அதிகாலை 5:00 மணிக்கு கோவில் திறக்கப்படுவதற்கு முன்பே, பெண்கள் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் சாமியை வழிபட்டு, கோவில் வளாகத்தில் உள்ள நாகாத்தம்மன் புற்றுக்கு பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.