/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது
வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது
வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது
வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது
ADDED : ஜூன் 04, 2024 12:35 AM
கண்ணகி நகர், கண்ணகி நகரை சேர்ந்த மஞ்சுளா, 46, பிரியா, 24, கெளசல்யா, 24. மூன்று பேரும் திருமணமானவர்கள்.
இவர்கள் மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து கஞ்சா வாங்கி, அவரவர் வீட்டில் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். கண்ணகி நகர் போலீசார், நேற்று மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியை சேர்ந்த அமுதா, 38, ராணி, 27. இவர்கள், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தனர்.
இவர்களை கைது செய்த போலீசார், 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.