ADDED : ஜூலை 08, 2024 01:22 AM
கோவிலம்பாக்கம்:மடிப்பாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம் - சுண்ணாம்பு கொளத்துார் ஊராட்சியில் 50 பிரதான சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்று காணப்பட்டன.
நலச்சங்கங்களின் கோரிக்கையை அடுத்து, பஞ்சாயத்து பொது நிதி 2.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மேலும், சி.எம்.டி.ஏ.,ன் சார்பில் 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதியில், சிமென்ட், தார் சாலைகள் என மொத்தம், 47 சாலைகள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக, ஊராட்சி தலைவர் கீதா தெரிவித்தார்.