/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 41 சவரன் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் கைது 41 சவரன் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் கைது
41 சவரன் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் கைது
41 சவரன் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் கைது
41 சவரன் போலி நகைகளை அடகு வைக்க வந்தவர் கைது
ADDED : ஜூலை 18, 2024 12:07 AM

அண்ணா நகர், அண்ணா நகர், இரண்டாவது பிரதான சாலையில், தங்க நகைகளுக்கு பணம் கொடுக்கும், 'மேக்ஸ் கோல்ட்' என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, இந்நிறுவனத்திற்கு வந்த நபர் ஒருவர், 41 சவரன் மதிப்பிலான நகைகளை கொடுத்து பணம் கேட்டுள்ளார். ஊழியர்கள், அவரது முகவரி தொடர்பான விபரங்களை கேட்ட போது, சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம் என, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
சந்தேகமடைந்த ஊழியர்கள், நகைகளை சோதித்த போது, அனைத்தும் போலி என்பது தெரிந்தது. ஊழியர்கள் உடனடியாக வாலிபரை பிடித்து, அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
நிறுவன கிளை மேலாளர் ராஜா அளித்த புகாரின் படி, அண்ணா நகர் போலீசார், வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரிப்கான், 33 என்பவர், போலி நகைகளை அடகு வைக்க முயன்றது தெரிந்தது. அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.