Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கண்கவர் நிறங்களில் 402 கடத்தல் உடும்புகள் பறிமுதல்

கண்கவர் நிறங்களில் 402 கடத்தல் உடும்புகள் பறிமுதல்

ADDED : ஜூலை 09, 2024 12:13 AM

Google News
Latest Tamil News
சென்னை, தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 402 அரிய வகை உடும்பு குட்டிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'தாய் ஏர்வேஸ்' விமானம், நேற்று முன்தினம் காலை வந்தது. அதில் வந்த பயணி ஒருவர், இரண்டு அட்டைப் பெட்டிகளுடன் வெளியே செல்ல முயன்றார்.

அந்த அட்டை பெட்டிகளை, அதிகாரிகள் சோதனையிட்டனர். இரு பெட்டிகளிலும் 402 உடும்புகள் இருந்தன. உடனடியாக மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு, விமானநிலைய சுங்க அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அவற்றை கொண்டு வந்தது, பெங்களூரை சேர்ந்த 30 வயது பயணி என்பதும், முறையான எந்த ஆவணமும் இல்லாமல் விமானத்தில் கடத்தி வந்ததும் உறுதியானது.

அட்டைபெட்டியில் அடைக்கப்பட்டிருந்த உடும்புகளை சோதித்த போது, அவற்றில் 67 உடும்புகள் மூச்சு திணறி இறந்து கிடந்தன. மற்ற உடும்புகள், பச்சை, ஆரஞ்சு, மஞ்சள், நீலம் என, நான்கு கண்கவர் வண்ணங்களில் இருந்தன.

இறந்தவற்றை தவிர எஞ்சியிருந்த உடும்புகளை விமானத்திலேயே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். சட்டவிரோதமாக கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் பெரும்பாலான விமான நிலையங்களில் இவை போன்ற உயிரினங்களை, செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காக கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

கள்ளச்சந்தையில் இவற்றின் மதிப்பு அதிகம் என்பதால், குறிப்பிட்டசில குழுக்கள் இவற்றை கடத்தி வருகின்றன.

இவ்வாறு கடத்தி வரும் உயிரினங்களால், நம் நாட்டில் வினோத நோய் பரவல் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இனப்பெருக்கம் செய்து மீண்டும் ஏற்றுமதி

வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் உயிரினங்கள், சிலரால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சில உயிரினங்கள் மருந்து தயாரிப்புக்கும், இறைச்சிக்காகவும் கூட கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.இந்தியாவில் இறைச்சிக்காக உடும்பு வகைகள் கொல்லப்படுகின்றன. ஆனால், தற்போது பிடிபட்டுள்ள வெளிநாட்டு உடும்பு வகைகள், இறைச்சிக்காகவோ அல்லது மருந்து தயாரிப்புக்காவோ பயன்படாது என்றும், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து அரசு கால்நடை டாக்டர் ஏ.பிரதீப் கூறியதாவது: பச்சை உடும்பு மற்றும் பச்சோந்தி இனங்களை பொருத்தவரையில், அவற்றிடமிருந்து எவ்வித மருந்தும் தயாரிக்கப்படுவதில்லை. அதேநேரம், இந்த வகை உடும்புகள் எளிதில் மனிதர்களுடன் பழக்கூடிய ஒரு விலங்கினம். தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட தென்கிழக்கு நாடுகளில், இந்த உடும்புகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர். இந்த உயிரினங்களில் இருந்து, மனிதர்களுக்கு நோய் பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை. அதேபோல், ஆண்மை போன்றவற்றிற்கு மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதில்லை. தென்கிழக்கு நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக உடும்பு, பச்சோந்தி வகைகள் இருப்பதால், அவற்றை இனப்பெருக்கத்துக்காக இந்தியாவுக்கு கடத்தி வருகின்றனர். இனப்பெருக்கம் செய்விக்கப்பட்டு, மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

உள்ளூர் உடும்பு

பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை

'செ ன்னை விமான நிலையத்தில் பிடிபட்ட பச்சை உடும்புகளை, நம்நாட்டில் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு அனுமதி இல்லை' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்களை இறக்குமதி செய்து, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சில முகவர்கள் வாயிலாக, பச்சை உடும்புகள் போன்ற விலங்குகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. வீடுகளில் அலங்கார மீன்கள், கிளிகள் போன்று இவற்றையும் சிலர் வளர்ப்பது பழக்கத்தில் உள்ளது. சிறிய அளவில் இருக்கும் பச்சை உடும்புகள் மனிதர்களுடன் இசைந்து விளையாடும். கண்கவர் வண்ணங்களில் இருப்பதால், அவற்றின் கவர்ச்சிக்காகவும் வீடுகளில் வளர்க்கின்றனர். இருப்பினும், வெளிநாடுகளை சேர்ந்த இது போன்ற உயிரினங்களை வளர்ப்போர், அதுகுறித்து வனத்துறையின் முறையாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான உரிமம், அனுமதி இன்றி இது போன்ற உயிரினங்களை வளர்ப்பது, 1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம், ஏழு ஆண்டு சிறை தண்டணை விதிக்கவும் வழிவகை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் உடும்பு, இந்திய உடும்பு அல்லது வங்காள உடும்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்திய உடும்புகளின் தோல், கஞ்சிரா உள்ளிட்ட சில வகை இசை கருவிகள் தயாரிப்பதற்கும், மருந்து தயாரிக்கவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுவதால், இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சிக்கிய உடும்புகள்

பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை

'செ ன்னை விமான நிலையத்தில் பிடிபட்ட பச்சை உடும்புகளை, நம்நாட்டில் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு அனுமதி இல்லை' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்களை இறக்குமதி செய்து, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சில முகவர்கள் வாயிலாக, பச்சை உடும்புகள் போன்ற விலங்குகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. வீடுகளில் அலங்கார மீன்கள், கிளிகள் போன்று இவற்றையும் சிலர் வளர்ப்பது பழக்கத்தில் உள்ளது. சிறிய அளவில் இருக்கும் பச்சை உடும்புகள் மனிதர்களுடன் இசைந்து விளையாடும். கண்கவர் வண்ணங்களில் இருப்பதால், அவற்றின் கவர்ச்சிக்காகவும் வீடுகளில் வளர்க்கின்றனர். இருப்பினும், வெளிநாடுகளை சேர்ந்த இது போன்ற உயிரினங்களை வளர்ப்போர், அதுகுறித்து வனத்துறையின் முறையாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான உரிமம், அனுமதி இன்றி இது போன்ற உயிரினங்களை வளர்ப்பது, 1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம், ஏழு ஆண்டு சிறை தண்டணை விதிக்கவும் வழிவகை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

விமானத்தில் கடத்தி வந்த உடும்பு குட்டிகள், நான்கு நிறங்களில் இருந்தன.

பச்சை உடும்பு: 229

ஆரஞ்ச் நிற உடும்பு: 113

மஞ்சள்: 7

நீலம்: 53

விலை ரூ.15,000 - ரூ. 20,000

பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை

'செ ன்னை விமான நிலையத்தில் பிடிபட்ட பச்சை உடும்புகளை, நம்நாட்டில் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு அனுமதி இல்லை' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்களை இறக்குமதி செய்து, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சில முகவர்கள் வாயிலாக, பச்சை உடும்புகள் போன்ற விலங்குகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. வீடுகளில் அலங்கார மீன்கள், கிளிகள் போன்று இவற்றையும் சிலர் வளர்ப்பது பழக்கத்தில் உள்ளது. சிறிய அளவில் இருக்கும் பச்சை உடும்புகள் மனிதர்களுடன் இசைந்து விளையாடும். கண்கவர் வண்ணங்களில் இருப்பதால், அவற்றின் கவர்ச்சிக்காகவும் வீடுகளில் வளர்க்கின்றனர். இருப்பினும், வெளிநாடுகளை சேர்ந்த இது போன்ற உயிரினங்களை வளர்ப்போர், அதுகுறித்து வனத்துறையின் முறையாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான உரிமம், அனுமதி இன்றி இது போன்ற உயிரினங்களை வளர்ப்பது, 1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம், ஏழு ஆண்டு சிறை தண்டணை விதிக்கவும் வழிவகை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாட்டு உடும்புகள்

தென் அமெரிக்க நாடுகளிலும், தெற்கு ஆசிய நாடுகளிலும் பச்சை உடும்புகள் காணப்படுகின்றன. இந்த வகை உடும்பு குட்டிகள் பார்ப்பதற்கு பச்சோந்திகள் போன்று காணப்படும்.

* பொதுவாக பச்சை உடும்புகள், 4 அடி முதல் 5.6 அடி நீளம் வரை வளரும்

* குறிப்பிட்ட சிறிய ரக பச்சை உடும்புகள், 30 முதல் 43 செ.மீ., நீளம் வரை வளரும்

* சிறிய ரக பச்சை உடும்புகள் 3.7 முதல் 5.2 செ.மீ., உயரம் வரை வளரும்

* சிறிய ரக பச்சை உடும்புகளின் எடை 1.2 முதல் 4 கிலோ வரை இருக்கும்

* இவற்றின் ஆயுள் காலம், 12 முதல் 25 ஆண்டுகள்

* பச்சை, நீலம், ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களிலும் உடும்பு குட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பிடிபட்டால் 7 ஆண்டு சிறை தண்டனை

'செ ன்னை விமான நிலையத்தில் பிடிபட்ட பச்சை உடும்புகளை, நம்நாட்டில் வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு அனுமதி இல்லை' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்களை இறக்குமதி செய்து, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது.சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், சில முகவர்கள் வாயிலாக, பச்சை உடும்புகள் போன்ற விலங்குகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. வீடுகளில் அலங்கார மீன்கள், கிளிகள் போன்று இவற்றையும் சிலர் வளர்ப்பது பழக்கத்தில் உள்ளது. சிறிய அளவில் இருக்கும் பச்சை உடும்புகள் மனிதர்களுடன் இசைந்து விளையாடும். கண்கவர் வண்ணங்களில் இருப்பதால், அவற்றின் கவர்ச்சிக்காகவும் வீடுகளில் வளர்க்கின்றனர். இருப்பினும், வெளிநாடுகளை சேர்ந்த இது போன்ற உயிரினங்களை வளர்ப்போர், அதுகுறித்து வனத்துறையின் முறையாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான உரிமம், அனுமதி இன்றி இது போன்ற உயிரினங்களை வளர்ப்பது, 1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோருக்கு அபராதம், ஏழு ஆண்டு சிறை தண்டணை விதிக்கவும் வழிவகை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

நிறங்களில் இருந்தன

      Our Apps Available On

      Dinamalar

      Follow us