/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதியவரிடம் பணம் பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது முதியவரிடம் பணம் பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
முதியவரிடம் பணம் பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
முதியவரிடம் பணம் பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
முதியவரிடம் பணம் பறித்த சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
ADDED : ஜூன் 01, 2024 12:33 AM
வியாசர்பாடி, வியாசர்பாடி, ஜெகஜீவன்ராம் நகரைச் சேர்ந்தவர் முருகேசன், 68; லாரியில் மண் லோடு ஏற்றும் வேலை பார்க்கிறார். கடந்த 20ம் தேதி அதிகாலை, வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.
வியாசர்பாடி, திடீர் நகர் மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்ற போது, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், முருகேசனை தாக்கியுள்ளனர்.
பின், அவரது சட்டைப்பையில் இருந்த, 6,000 ரூபாய், மொபைல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில், பணம் பறிப்பில் ஈடுபட்ட, வியாசர்பாடியைச் சேர்ந்த ஜாகீர் உசேன், 19, விக்னேஷ், 18, மற்றும் இரு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.