36 வயது வாலிபர் மீது 35 வழக்குகள்
36 வயது வாலிபர் மீது 35 வழக்குகள்
36 வயது வாலிபர் மீது 35 வழக்குகள்
ADDED : ஜூலை 31, 2024 12:21 AM
புளியந்தோப்பு,
புளியந்தோப்பு சுற்றுவட்டார பகுதியில் புழக்கத்தில் உள்ள கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கன்னிகாபுரம் எம்.எஸ்.முத்து நகரில், போலீசார் ரோந்து சென்ற போது, கன்னிகாபுரம் புதிய திரு.வி.க.நகரை சேர்ந்த அப்பு என்கிற சிலம்பரசன்,36 என்பவரை சந்தேகித்து சோதனையிட்டனர்.
அவரிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை வஸ்துகளை, அவர் விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சிலம்பரசன் மீது ஏற்கனவே பல்வேறு பிரிவுகளில் 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், புளியந்தோப்பு நரசிம்மன் நகர் பிரதான சாலையில் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்றுக் கொண்டிருந்த புளியந்தோப்பு, வாசுகி நகரை சேர்ந்த, ப்ரியா என்கிற 'அறுப்பு' அமுல், 31 என்ற பெண்ணை, கைது செய்தனர்.
இவர் மீதும் ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளன.