ADDED : ஜூலை 05, 2024 12:32 AM
சென்னை,சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு, வருகை என மூன்று விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
லண்டனில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12:45 மணிக்கு புறப்பட்டு காலை 3:30 மணிக்கு சென்னை வரும் பிரிடிஷ் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதே போல், சென்னையில் இருந்து காலை 8:05 மணிக்கு டில்லி புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம், சீரடிக்கு மதியம் 2:40மணிக்கு புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் என, இரு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
இந்த விமானங்கள் நிர்வாக காரணங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.