/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில் பயணியரிடம் மொபைல்போன் திருடிய 3 பேர் கைது ரயில் பயணியரிடம் மொபைல்போன் திருடிய 3 பேர் கைது
ரயில் பயணியரிடம் மொபைல்போன் திருடிய 3 பேர் கைது
ரயில் பயணியரிடம் மொபைல்போன் திருடிய 3 பேர் கைது
ரயில் பயணியரிடம் மொபைல்போன் திருடிய 3 பேர் கைது
ADDED : மார் 11, 2025 08:56 PM
சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், புறநகர் ரயில் டிக்கெட் எடுக்கும் அலுவலகம் அருகே, பயணியரின் மொபைல் போன்கள் அடிக்கடி திருடு போயின. இதுகுறித்த புகாரையடுத்து, ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார், புறநகர் மின்சார ரயில் டிக்கெட் எடுக்கும் இடத்தில் கண்காணித்து வந்தனர்.
நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக நின்ற, ஒடிசாவை சேர்ந்த அர்ஜுன்காலியா 30, லித்தன்நாயக் 31, அபயதாரி 31, ஆகியோரை பிடித்து விசாரித்தபோது, மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து, ஐந்து மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.