ADDED : ஜூன் 26, 2024 12:10 AM
வேப்பேரி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 29 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 22 கிலோ கஞ்சா, 2 கார்கள், 2 ஆட்டோக்கள், 9 மொபைல்போன்கள், இருசக்கர வாகனம் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நடப்பாண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 162 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.