Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூட்டுறவு அலுவலகத்தில் 200 இருக்கையுடன் அரங்கம்

கூட்டுறவு அலுவலகத்தில் 200 இருக்கையுடன் அரங்கம்

கூட்டுறவு அலுவலகத்தில் 200 இருக்கையுடன் அரங்கம்

கூட்டுறவு அலுவலகத்தில் 200 இருக்கையுடன் அரங்கம்

ADDED : ஜூன் 27, 2024 12:21 AM


Google News
சென்னை, சேத்துப்பட்டில் தமிழக கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் உள்ளது.

அதன் நான்காவது தளத்தில், 48 லட்சம் ரூபாயில், 4,000 சதுர அடியில், 200 இருக்கைகளுடன் கருணாநிதி நுாற்றாண்டு நினைவரங்கம் - வானவில் கூட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று துவக்கி வைத்தார். மேலும், கூட்ட அரங்கின் கூரையில், 78 கிலோ வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் வாயிலாக தினமும், 312 யூனிட் என, மாதத்திற்கு, 9,300 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இந்த மின்சாரம் அலுவலக கட்டடம் பயன்படுத்தப்படும்.

இதனால் மாதம், 80,000 ரூபாய் மின் கட்டணம் மிச்சமாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us