/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீட்டின் அருகே பதுக்கிய 20 லிட்., சாராயம் பறிமுதல் வீட்டின் அருகே பதுக்கிய 20 லிட்., சாராயம் பறிமுதல்
வீட்டின் அருகே பதுக்கிய 20 லிட்., சாராயம் பறிமுதல்
வீட்டின் அருகே பதுக்கிய 20 லிட்., சாராயம் பறிமுதல்
வீட்டின் அருகே பதுக்கிய 20 லிட்., சாராயம் பறிமுதல்
ADDED : ஜூலை 03, 2024 12:30 AM
திருத்தணி,
திருத்தணி தாலுகா சிவாடா மற்றும் நல்லாட்டூர் ஆகிய பகுதிகளில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று, மேற்கண்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது சிவாடா மற்றும் நல்லாட்டூர் பகுதியில், நான்கு வீடுகளின் அருகே, 20 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புள்ள சிவாடாவைச் சேர்ந்த யுவராஜ், 27, காமராஜ், 29, நல்லாட்டூர் மோகனசுந்தரம்,34, ராணி,48, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஆந்திர மாநிலம், ஒஜிகுப்பம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து, விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிந்தது.