/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீனாட்சி அம்மாள் கல்லுாரியில் 2 நாள் 'ஈறு நோய்' கருத்தரங்கம் மீனாட்சி அம்மாள் கல்லுாரியில் 2 நாள் 'ஈறு நோய்' கருத்தரங்கம்
மீனாட்சி அம்மாள் கல்லுாரியில் 2 நாள் 'ஈறு நோய்' கருத்தரங்கம்
மீனாட்சி அம்மாள் கல்லுாரியில் 2 நாள் 'ஈறு நோய்' கருத்தரங்கம்
மீனாட்சி அம்மாள் கல்லுாரியில் 2 நாள் 'ஈறு நோய்' கருத்தரங்கம்
ADDED : ஜூன் 25, 2024 12:27 AM

மதுரவாயல், மதுரவாயல், ஆலப்பாக்கம் பிரதான சாலையில், மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது.
இங்குல இந்திய பீரியடோன்டாலஜி சங்கமான ஐ.எஸ்.பி., சென்னை ஐ.எஸ்.பி., ஆய்வு குழு மற்றும் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லுாரி இணைந்து, பீரியோ அண்டர்கிராஜுவேட்' என்ற இருநாள் கருத்தரங்கம் நடத்தின.
இதில், 25 மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஈறு நோய்கள் குறித்த தங்கள் ஆராய்ச்சிகளை சமர்ப்பித்தனர்.
நேற்று நடந்த கருத்தரங்கத்தில், தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சங்குமணி பேசியதாவது:
மருத்துவர்கள் நோயை கண்டறிவதுடன், நோயாளிகளுக்கு நல்ல ஆலோசகராக இருக்க வேண்டும். அதேபோல ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருக்க வேண்டியது அவசியம்.
இளைய மூளை ஒரு வினாடிக்கு 160 மீ., வேகத்தில் வேலை செய்யும். அதற்கேற்ப வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.
நம் உடலில் கடனமான உறுப்பு பல் தான். ஆனால், மருத்துவ துறையில் பல் மருத்துவர்கள் தான் மென்மையான மருத்துவர்களாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.