Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆஸ்திக சேவா சமதியின் 17ம் ஆண்டு மகோற்சவம்

ஆஸ்திக சேவா சமதியின் 17ம் ஆண்டு மகோற்சவம்

ஆஸ்திக சேவா சமதியின் 17ம் ஆண்டு மகோற்சவம்

ஆஸ்திக சேவா சமதியின் 17ம் ஆண்டு மகோற்சவம்

ADDED : ஜூலை 27, 2024 12:18 AM


Google News
சென்னை, ராமாபுரத்தில் ஆஸ்திக சேவா சமதி செயல்பட்டு வருகிறது. அதன் சார்பில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும், மகோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு கடந்த, 19ம் தேதி முதல் நாளை வரை, 10 நாட்கள், 17ம் ஆண்டு மகோற்சவம், மேற்கு மாம்பலம், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

முதல் நாள், மகா கணபதி ஹோமத்துடன் துவங்கி, அதிருத்ர மகாயக்ஞம், ருத்ரகிரமார்ச்சனை, மந்தரபுஷ்பம், நான்கு வேதகோஷம், நாம சங்கீர்த்தனம், பரதநாட்டிய நிகழ்வு நடந்தது.

நேற்று, நவசண்டி மகாயக்ஞம், அன்னதானம் ஆகியவை நடந்தன. இன்று காலை 8:00 மணி முதல் ஸ்ரீ ஹரிஜி, யக்ஞ ராமதாஸ் தலைமையில் தோடய மங்களம், அஷ்டபதி பஜனை நடக்கிறது. நாளை காலை 8:00 மணி முதல் உஞ்சவிருத்தி, திவ்யநாமம், ராதா கல்யாணம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு உபன்யாசம் பூர்த்தி, ஆஞ்சநேயர் உற்சவம், டோலோற்சவம், மங்கள ஆரத்தி நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சமிதி ஸ்தாபகர் பாலசுப்ரமணிய கனபாடிகள், தலைவர் முரளீதர சாஸ்திரிகள் தலைமையில் விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us