/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 118 திருடர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் 118 திருடர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
118 திருடர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
118 திருடர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
118 திருடர்கள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ADDED : ஜூன் 21, 2024 12:12 AM
வேப்பேரி, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, செயின்பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்றனர். அதன்படி கடந்த ஏழு நாட்களில், திருட்டு தொடர்பான குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 39 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 65 சவரன் நகை, 80 கிராம் வெள்ளி பொருட்கள், 72.71 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நடப்பாண்டில், செயின் பறிப்பு, வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்த, 118 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.