/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காஞ்சிபுரம் தொகுதியில் 1,101 செல்லாத ஓட்டுகள் காஞ்சிபுரம் தொகுதியில் 1,101 செல்லாத ஓட்டுகள்
காஞ்சிபுரம் தொகுதியில் 1,101 செல்லாத ஓட்டுகள்
காஞ்சிபுரம் தொகுதியில் 1,101 செல்லாத ஓட்டுகள்
காஞ்சிபுரம் தொகுதியில் 1,101 செல்லாத ஓட்டுகள்
ADDED : ஜூன் 06, 2024 12:21 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி முழுதும் பெறப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் என, 7,550 பேர் தபால் ஓட்டு செலுத்தியிருந்தனர்.
தேர்தல் முடிவு வெளியான நேற்று முன்தினம், ஓட்டு எண்ணிக்கையின்போது, தபால் ஓட்டு செலுத்திய, 7,550 பேரின் ஓட்டுகள், எட்டு மேஜைகளில் இரண்டு சுற்றுகளாக எண்ணப்பட்டன.
அப்போது, விண்ணப்பம் சரிவர பூர்த்தி செய்யாதது, சின்னங்களை சரியாக தேர்வு செய்யாதது, உறுதிமொழி படிவம் இணைக்காதது என, பல்வேறு காரணங்களுக்காக, 1,101 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகள் என தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன. மீதமுள்ள, 6,449 தபால் ஓட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டன.
கடந்த 2019 தேர்தலில், 546 தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகின. அதைவிட இம்முறை 555 ஓட்டுகள் அதிக எண்ணிக்கையில் செல்லாத ஓட்டுகளாகி உள்ளன.