/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இழந்த பசுமையை மீட்டெடுக்க ஓ.எம்.ஆரில் 100 துாதுவர்கள் இழந்த பசுமையை மீட்டெடுக்க ஓ.எம்.ஆரில் 100 துாதுவர்கள்
இழந்த பசுமையை மீட்டெடுக்க ஓ.எம்.ஆரில் 100 துாதுவர்கள்
இழந்த பசுமையை மீட்டெடுக்க ஓ.எம்.ஆரில் 100 துாதுவர்கள்
இழந்த பசுமையை மீட்டெடுக்க ஓ.எம்.ஆரில் 100 துாதுவர்கள்
ADDED : ஜூன் 04, 2024 12:16 AM
கண்ணகி நகர்,சென்னையில் வானுயர்ந்த கட்டடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பு, குப்பை போன்ற காரணத்தால், நீர், நிலம், காற்று மாசடைந்து வருகிறது.
இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், இனிமேல் முறையாக கையாளவும், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, முதல் தலைமுறை கற்றல் மையம் இணைந்து, பசுமை துாதுவர்களை நியமிக்க முடிவு செய்தது.
இதன்படி, ஓ.எம்.ஆர்., கண்ணகி நகரை சேர்ந்த, 18 முதல் 48 வயதுக்கு உட்பட்ட 100 பேர், பசுமை துாதுவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, பலக்கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக, மட்கும் குப்பை, மட்காத குப்பையை கையாள்வது, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, மின்சார சிக்கனம், பிளாஸ்டிக் தவிர்ப்பது, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருப்பது போன்ற நடவடிக்கையை, அவரவர் வீடுகளில் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
அடுத்தகட்டமாக, ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக ஒரு மரக்கன்று நட்டு பராமரிப்பது, அருகில் உள்ள நீர்நிலைகளை சீரமைப்பது, கண்காணிப்பது, குப்பை கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.
இதற்கான அறிமுக விழா, 9ம் தேதி நடைபெற உள்ளது. இதில், வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஷு மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள், பங்கேற்க உள்ளனர்.