/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏழு மாதங்களில் 10 குதிரைகள் உயிரிழப்பு ஏழு மாதங்களில் 10 குதிரைகள் உயிரிழப்பு
ஏழு மாதங்களில் 10 குதிரைகள் உயிரிழப்பு
ஏழு மாதங்களில் 10 குதிரைகள் உயிரிழப்பு
ஏழு மாதங்களில் 10 குதிரைகள் உயிரிழப்பு
ADDED : ஜூலை 05, 2024 12:19 AM
சென்னை, சென்னை மெரினா, பெசன்ட் நகர் பகுதிகளில் 160 குதிரைகள் உள்ளன. இதில், 93 குதிரைகள் சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற குதிரைகள், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், 10 குதிரைகள், கடந்த ஏழு மாதங்களில் உயிரிழந்துள்ளன. வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 64 குதிரைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, கால்நடை நல வாரியம் தெரிவித்துள்ளது.
கால்நடை நல வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
குதிரைகளை வைத்திருப்போர், அவற்றை முறையாக பராமரிக்கும் வசதி இல்லாதது, சுற்றுப்புறச் சூழல் காரணமாக, குதிரைகள் நோய் பாதிப்பில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
அவ்வாறு முறையாக பராமரிக்காததாலும், குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும், ஏழு மாதங்களில் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளன.
இதுபோன்று உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது
புதிதாக ஒன்பது குதிரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குதிரைகளை முறையாக பதிவு செய்வது அவசியம். மேலும், குதிரைகளுக்கான இருப்பிடம், உணவு போன்ற பராமரிப்புகளையும், உரிமையாளர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.