ADDED : செப் 15, 2025 10:33 PM
செம்மஞ்சேரி;வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்
சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 25. வீட்டிற்கு முன் நிறுத்திய இவரது, 'யமஹா ஆர்15' என்ற இருசக்கர வாகனம், கடந்த சில நாட்களுக்கு முன் திருடு போனது.
இதுகுறித்த புகாரை, செம்மஞ்சேரி போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், சோழிங்கநல்லுார், ஏரிக்கரையைச் சேர்ந்த அரவிந்த், 28, என்பவர், இருசக்கர வாகனத்தை திருடியது தெரிந்தது.
நேற்று இவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.