ADDED : பிப் 25, 2024 01:38 AM
அசோக் நகர்:தி.நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 24 வயது இளம்பெண்.
இவர், கடந்த 21ம் தேதி, தன் சகோதரியுடன் வடபழனி, பஜனை கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
இளம்பெண் கூச்சலிடவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, அசோக் நகர் போலீசார் விசாரித்தனர்.
'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கோடம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், 21, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 'பைக்'கையும் பறிமுதல் செய்தனர்.