/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பொலம்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தை துார்வாரும் பணி துவக்கம் பொலம்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தை துார்வாரும் பணி துவக்கம்
பொலம்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தை துார்வாரும் பணி துவக்கம்
பொலம்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தை துார்வாரும் பணி துவக்கம்
பொலம்பாக்கம் விநாயகர் கோவில் குளத்தை துார்வாரும் பணி துவக்கம்
ADDED : செப் 14, 2025 10:26 PM
சித்தாமூர்:பொலம்பாக்கத்தில் 50 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்து விநாயகர் கோவில் குளம் துார்வாரும் பணி நேற்று துவங்கியது.
சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் ஊராட்சியில் விநாயகர் கோவில் அருகே 3.5 ஏக்கர் குளம் உள்ளது.
குளத்தின் நீரை குடிநீராகவும், வீட்டு உபயோகங்களுக்கு அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில் பராமரிப்பு இன்றி நீர் மாசடைந்தது.
குளத்தை துார்வாரி சீரமைக்கவேண்டும் என, கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், தனியார் தொண்டு நிறுவன நிதியின் கீழ் 20 லட்சத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் குளத்தை துார்வாரும் பணி நேற்று துவங்கியது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
சித்தாமூர் சுற்றுவட்டாரப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். பொலம்பாக்கம் ஊராட்சியில் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வந்ததால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொலம்பாக்கம் பெரிய ஏரி, 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட நெல்வாய் ஏரி,வண்ணான் குளம் மற்றும் அம்மன் கோவில் குளம் மற்றும் ஏரி பாசனக்கால்வாய்கள் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக துார்வாரி சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்டபொலம்பாக்கம் விநாயகர் கோவில் குளம் துார்வாரும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.