/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ அரசு பேருந்து மோதி செங்கையில் பெண் பலி அரசு பேருந்து மோதி செங்கையில் பெண் பலி
அரசு பேருந்து மோதி செங்கையில் பெண் பலி
அரசு பேருந்து மோதி செங்கையில் பெண் பலி
அரசு பேருந்து மோதி செங்கையில் பெண் பலி
ADDED : மே 23, 2025 02:47 AM

செங்கல்பட்டு,:காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று மாலை, விழுப்புரம் போக்குவரத்து கழக பேருந்து தடம் எண்:'212 ஹெச்' வந்தது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தத்தில் நின்று, மீண்டும் புறப்பட்ட போது, அங்கு சாலையைக் கடக்க முயன்ற, 50 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், அப்பெண் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த பெண் குறித்து விசாரிக்கின்றனர்.