/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பயன்பாடற்ற பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?பயன்பாடற்ற பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?
பயன்பாடற்ற பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?
பயன்பாடற்ற பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?
பயன்பாடற்ற பள்ளி கட்டடம் அகற்றப்படுமா?
ADDED : பிப் 06, 2024 04:45 AM

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 80-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த வளாகத்தில், 1981ம் ஆண்டு ஓடுகளால் வேயப்பட்ட பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, 40 ஆண்டுகள் கடந்த நிலையில் பயன்பாடு இன்றி, பழைய பொருட்களை வைக்கும் இடமாக மாறி உள்ளது.
இதையடுத்து, கட்டடம் பழமையானதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்து அகற்ற, துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.