/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/பெருமாட்டுநல்லுார் சாலையில் 'பேனர்'கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?பெருமாட்டுநல்லுார் சாலையில் 'பேனர்'கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
பெருமாட்டுநல்லுார் சாலையில் 'பேனர்'கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
பெருமாட்டுநல்லுார் சாலையில் 'பேனர்'கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
பெருமாட்டுநல்லுார் சாலையில் 'பேனர்'கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
ADDED : ஜன 05, 2024 09:13 PM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் சாலையில், இரு புறங்களிலும் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பேனர் வைத்துஉள்ளனர்.
சாலையில் பேனர் வைக்க, அரசு மற்றும் நீதிமன்ற தடை உத்தரவு இருக்கும் நிலையில், அதை எந்த அரசியல் கட்சியினரும் பொருட்படுத்துவதில்லை. சாலையோரம், பள்ளிகள் முன் என, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தும் விதமாக, பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, சமூக நல ஆர்வலர் கூறியதாவது:
சாலையின் ஓரமாக, வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் விதமாக, ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற உத்தரவை யாரும் மதிப்பதில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக புகார் அளித்தும், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
ஏற்கனவே, மழையில் சேதமடைந்த சாலைகள், போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளன. இந்நிலையில், சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களும், வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளன.
எனவே, அனுமதியின்றி பேனர் வைக்கும் நபர்களை கண்டறிந்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.