/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/நெல்வாய்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?நெல்வாய்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
நெல்வாய்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
நெல்வாய்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
நெல்வாய்பாளையம் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?
ADDED : பிப் 11, 2024 11:33 PM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே நெல்வாய்பாளையம் காலனி பகுதியில், அம்மன் கோவில் அருகே 30 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.
குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாக, மேல்நிலைத் தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு மேல்நிலைத் குடிநீர் தேக்கத்தொட்டி சீரமைப்புப் பணி நடந்தது. நாளடைவில், மேல்நிலைத் தேக்கத் தொட்டியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, பழுதடைந்து உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய மேல்நிலைத் தேக்கத்தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.