Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கல்பட்டு தசரா விழாவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

செங்கல்பட்டு தசரா விழாவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

செங்கல்பட்டு தசரா விழாவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

செங்கல்பட்டு தசரா விழாவில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?

ADDED : செப் 28, 2025 11:54 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் தசரா விழா நடைபெற்று வரும் பகுதியில், அங்கு திரளும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டில் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, நவராத்திரி விழாவின் போது, தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தசரா விழா சின்னக்கடை, பூக்கடை, அண்ணாசாலை, சின்னம்மன்கோவில், அங்காளம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 23ம் தேதி விழா துவங்கி, வரும் அக்., 2ம் தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும், அம்மனுக்கு வெவ்வேறு மலர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். தினமும் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்வர்.

விழாவையொட்டி சிறிய, பெரிய அளவிலான ராட்டினங்கள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள், உணவு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

விழா நாட்களில்தினமும் மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:00 வரை, ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

ஆனால், இவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்படவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி, தசரா விழா நடைபெறும் பகுதியில் குடிநீர் வசதி செய்துதர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us