/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கிளை தபால் நிலைய சேவை நந்திவரத்தில் மீண்டும் வருமா?கிளை தபால் நிலைய சேவை நந்திவரத்தில் மீண்டும் வருமா?
கிளை தபால் நிலைய சேவை நந்திவரத்தில் மீண்டும் வருமா?
கிளை தபால் நிலைய சேவை நந்திவரத்தில் மீண்டும் வருமா?
கிளை தபால் நிலைய சேவை நந்திவரத்தில் மீண்டும் வருமா?
ADDED : ஜன 28, 2024 04:05 AM
கூடுவாஞ்சேரி: நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, சீனிவாசபுரம் சிக்னல் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், தபால் நிலையம் செயல்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன், இந்த தபால் நிலையம் கே.கே.நகர், ஏழாவது குறுக்கு தெருவிற்கு மாற்றப்பட்டது.
கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து, புதிதாக மாற்றப்பட்டுள்ள தபால் நிலையத்திற்கு 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டும்.
அங்கு, செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முதியோர் மற்றும் பென்ஷன் தொகை வாங்குவோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், தபால் நிலையம் செல்வதற்கு, ஆட்டோவிற்காக கணிசமான தொகையை செலவிட வேண்டியுள்ளது.
எனவே, நந்திவரம்- - நெல்லிக்குப்பம் சாலையில், அரசு பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடம் அருகில், கிளை தபால் நிலைய சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.